9#

*நீ என்ன வேண்டும் எனக்கு?

உன்னைப் பார்த்தாலே

மனசுக்குள் ஏதோ துளிர்க்கிறது.

பார்க்காதபோதோ

பார்க்கவேண்டும்போல் ஆகிறது.

நாம் பேச நேரிட்டுவிட்டாலோ

பேசிப் பிரிந்ததும்

என்ன பேசினோம் என்று

யோசித்து யோசித்தே நேரம் போகிறது.

நீ எனக்கு என்னதான் வேண்டும்?

நம்மிடையே என்ன இருக்கிறது?

நட்பா…

காதலா…

நாம் இருவரும் எதிர்பாலர்கள் என்ற

ஒரு காரணத்தாலேயே

இதைக் காதலெனக் கொள்ளலாகாது.*