7#

*காதலிப்பதற்கும்

காதலிக்கப்படுவதற்கும்

சம்பந்தமிருக்கிறதா என்ன?

காதலனாக இயலாவிடினும்

ஒரு கவிஞனாக

என்னால் உன்னைப் புரிந்துகொள்ள முடிகிறது

நீ என்னைக் காதலிப்பதில்

எனக்கேதும்

ஆட்சேபனை இல்லை பெண்ணே

என்னால் உன்னைக்

காதலிக்க முடியாது என்பதைத் தவிர

என்னிடமிருந்த காதலையெல்லாம்

ஒரு தேவதைக்காய்

அர்ப்பணித்துவிட்டதில்

உனக்காகத் தருவதற்கு ஒன்றும் மிச்சமில்லை*