56#

நம் முதல் சந்திப்பின்போது

இவை மகிழ்ந்து ஆரவாரித்ததையும்

முதல் கூடலின்போது

அவை தொந்தரவு கூடாதென்று

வாய்மூடி மௌனித்ததையும்

இவர்களெப்படி அறிவார்கள்.

மேற்கண்ட

இரண்டு முதல்களுக்கும்

இடையில் உள்ள

மிக மிகப் பரந்த

காதல் கதையை அவை

நாம் விரும்புகிறபோதெல்லாம்

என் காதில் சொல்கின்றன.

கொலுசின் பாஷைகூட

புரியாத இவர்களுக்கு

நான் என்ன சொல்லி

அதை விளக்குவது?*