55#

*கொலுசுகள் பேசக்கூடும் என்பது

தெரியாதவர்கள் கேட்கிறார்கள்,

`உன் கழுத்து மாலையில்

ஏன் கொலுசின் முத்துக்களெ’ன்று.

பலர் ஏதோ புரிந்ததுபோல்

தலையசைத்துக்கொண்டாலும்

சிலர் ஏன்? என்ன?

என்று துளைத்தெடுகிறார்கள்

அதன் பின்னால்

ஏதும்கதை கிடைக்குமா

என்பதைப்போல…

அவர்களுக்கெல்லாம் தெரியாது

இவற்றுக்கு உயிருள்ளதைப் பற்றி.*