51#

அன்புள்ள காதலுக்கு,

*செலவழிக்கவும் முடியவில்லை

வேறு எதுவாக

மாற்றிக் கொள்ளலாமெனில்

அதற்கும் வழியில்லை

இவ்வளவு காதலை வைத்துக்கொண்டு

நீ இல்லாமல்

நான் மட்டும் என்னதான் செய்வது?

 

கடிதங்களாகவும்

முத்தங்களாகவும்

தீர்த்ததுபோக

மீதமுள்ள காதலே மூச்சு முட்டுகிறது.

எல்லாவற்றுக்கும்போல

இதற்கும் நீதான்

ஏதாகிலும் உபாயம் சொல்லவேண்டும்.

 

- காதலி*