49#

*என்னிடம்

அடிக்கடி

தோற்றுப்போகும்

உன்னிடம்

எது விஷயமாகவும்

போட்டியிட

எனக்குப்

பொறாமையாக இருக்கிறது

 

ஆம்

வேண்டுமென்றே

காதலியிடம் தோற்று

காதலில் ஜெயிக்கும்

உன்னைப் பார்த்து

எனக்குக்

பொறாமையாகத்தான் இருக்கிறது*