48#

*அன்றொரு நாள்

என் ஒவ்வொரு விரலாகப் படித்து

நீ மருதாணி வைத்துவிட்டது

எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.

இவ்வளவு பொறுமையாக

நீ ஒரு காரியம் செய்து

நான் பார்த்ததேயில்லை…

 

உன் பொறுமை நாடகம்

சற்றைக்கெல்லாம் கலைந்துவிட்டது

நான் தடுக்கமாட்டேன்

என்ற தைரியத்தில் ஆடை கலைத்து

நீ செய்த காரியங்கள்…

 

நான் சும்மாயிருந்தது

நீ செய்ததெல்லாம் பிடித்திருந்ததால்தான்

என்று நினைத்துவிடாதே

என் கைகளில்

இருந்த மருதாணி நீ இட்டது

அது கலைந்துவிடக்கூடாது

என்பதால்தான்

 

இப்போது யாராவது

கைவிரல் பார்த்து

உனக்கு நல்லா செவந்திருக்கே

என்று கூறும்போதெல்லாம்

அன்று நான் முகம் சிவந்தது

நினைவிற்கு வருகிறது.*