47#

*நீ என்னை

முதன்முறையாக முத்தமிட்ட

செம்பருத்திச் செடிக்கரையிலும்

வாங்கத்தந்த கொலுசுகளிலும்

அன்று நடந்ததை நினைவூட்டும்

கசங்கிய சேலையிலும்

நாம் சேர்ந்து சென்ற

இடங்களிலெல்லாம்

வீசிக்கொண்டிருக்கும் காற்றிலும்

இன்னும் எதிலெல்லாமோ

நீ எனக்குத் தெரிகிறாய்.

ஆனால்

நாம் நேரில்

சந்தித்துக் கொள்ளும்போது மட்டும்

தொலைந்து போகிறாய்.*