46#

*விடிந்த பின்ரும்

தெரிந்து கொண்டிருக்கும் நேற்றைய நிலவைப்போல

மழை முடிந்த பின்ரும்

விழுந்து கொண்டிருக்கும் மரத் துளிகளைப்போல

படித்த பின்னரும்

மனசுக்குள் ரீங்கரிக்கும் நல்ல கவிதையைப்போல

போர்வைக்குள் சுருண்டு கொண்டாலும்

காதுக்குள் உணரும் குளிரைப்போல

அடித்து நின்ற பின்ரும்

கேட்டுக்கொண்டிருக்கும் கோயில் மணியைப்போல

மூடிக்கொண்டாலும்

கண்ணுக்குள் ஒளிரும் பச்சைச் சூரியன்போல

பண்டிகை முடிந்துவிட்டாலும்

காற்றில் மிச்சமிருக்கும் வெடிகளின் வாசனைபோல…

விழித்து வெகுநேரம் ஆகியும்

நேற்று நீ கனவில் வந்தது தெரிகிறது எனக்கு*