42#

*கனவில் பேசுபவர்கள்

மனிதர்கள்

கனவுகளுடன் பேசுபவர்கள்

காதலர்கள்

 

காதலர்கள்

வானத்துக்கும் நீலத்துக்கும்

வித்தியாசம் அறிந்தவர்கள்

 

காதலர்கள்

சூரியனுக்கும் நிலவுக்கும்

வித்தியாசம் தெரியாதவர்கள்

 

காதலர்கள்

மொட்டு பூவாக மாறும்

தேவகானத்துக்குச் சொந்தமானவர்கள்

 

காதலர்கள்

வேறென்ன சொல்வது

காதலர்கள்*