41#

*என் கவிதைகளை

உற்று நோக்குபர்களுக்கெல்லாம்

உன் முகம் நன்கு பரிச்சயமானதுதான்

என்றாலும்

உன்னைப் பற்றிய கவிதைகளi

நீயே வாசிக்கும்போது பார்க்கவேண்டுமே

நொடிக்கொருதரம் மாறும்

முன்பின் அறிந்திராத அந்த முகபாவங்களை

ஒரு கவிதையாக்கிவிட

நானும் முயற்சிக்கத்தான் செய்கிறேன்.

உன் மூக்குத்தியைப் போல இதுவும்

சிக்கமாட்டேன்கிறது என் வார்த்தைகளுக்குள்.

கவிதைத்தாளை உன் கையில்

கொடுக்கும் வரையில்

எல்லாம் சரியாகத்தானிருக்கிறது.

`இது நானா,

ஓ! அன்று நடந்தது,

ச்சீ, நாயே

இதெல்லாம் எழுதுவாங்க’ என்று கேட்கும்போதே

மீண்டும் புதிதாய்

காதல் கொண்டுவிடுகிறேன் நான்.

அபரிதமாக பொங்கிச் சிவக்கும்

உன் வெட்கத்தை

முத்தமிட்டுத் தீர்க்வே

சமயம் சரியாகிவிடுகிறது -

பிறகெங்கு கவிதை எழுதுவது

- இந்த முறையாவது பார்ப்போம்.*