39#

*நான் ஊருக்குக் கிளம்புமுன்

கலங்கிய கண்களையெல்லாம் விட

மற்றவருக்குப் பயந்து

கலங்காததுபோல் நடித்த

உன் கண்களின் சோகம்தான் அதிகம்.

அவர்களுக்கெல்லாம் பயப்படாமல்

வாய்விட்டு அழுவதற்காவது

ஜெயிக்க வேண்டும் நாம்!*