37#

*நீ சொல்வதற்காகவாவது

நிறுத்திவிடலாம்தான்

ஆனால்

ஒவ்வொரு முறை பல்லால் கடித்து

மூடித் திறக்கும்போதும்

ஒவ்வொருமுறை குவிந்த கைகளுக்குள்

தீக்குச்சி எரிக்கும்போதும்

`இதெல்லாம் வேணாமே’ என்று நீ

அதட்டலாகக் கெஞ்சியது

நினைவிற்கு வருகிறது.

 

அப்போது

நாம் இருந்த நிலையும்

உன் முகமிருந்த அழகும்…

அவற்றையெல்லாம்

நினைவுபடுத்திக்கொள்வதற்காகவே

நான் அதிகம்

கெட்டுப்போக வேண்டியிருக்கிறது.*