36#

*ஒரு முறை

காய்ச்சலுக்காக

மருத்துவரிடம் சென்றபோது

`வலிக்கும் பொறுத்துக் கொள்ளுங்கள்’

என்று ஊசி போட்டார்.

மனசுக்குள்

உன்னை இறுக்கி

அணைத்துக்கொண்டதில்

வலியே தெரியவில்லை.

இன்னொருமுறை போட்டுக்கொள்ளலாம்

என்றுகூடத் தோன்றியது.

ஊருக்கு வந்து உன்னைப் பார்த்த பிறகுதான்

தெரிந்துகொண்டேன்.

அன்று அதிகம் இறுக்கியதில்

உனக்கு வலித்துவிட்டதென்று.*