33#

*அன்றொருநாள்

நாம் சண்டையிட்டுக் கொண்டபோது

இனி இவளுடன் பேசக்கூடாது

என்று நினைத்தேன்

என் கோபத்தை மாற்ற

இந்த உலகத்தில் எதனாலும்

முடியாது என்று உறுதியாக இருந்தேன்

அப்போது

குளித்து முடித்து

தலையில் ஈரத் துண்டுடன்

எனக்குக் கேட்கக்கூடாதென்று

மெல்ல அலுங்காமல் வந்து நின்றாய்

ஆனால்

உன் வாசம் காட்டிக்கொடுத்துவிட்டது.

 

… அப்போதும் நான் திரும்பவில்லை.

கைகளில் அணிநச்திருந்த கொலுசுகளை

வேண்டுமென்றே அசைத்து

சத்தம்போடச் செய்தாய்

நான் மெல்லத் திரும்பிப் பார்த்தேன்.

 

… இப்போது யோசித்துப் பார்த்தால்

எனக்குப் புரியவில்லை

என் கோபம்தான்

அவ்வளவு அற்பமானதா

அல்லது

உன் மஞ்சள் புன்னகை

அவ்வளவு அற்புதமானதா என்று!*