31#

*சின்னத் துளிகளாய்

வானம் சிரிக்கையில்

விரிந்த குடைக்குள்

தோள்கள் உரச

நடந்தது சுகம்

 

எதற்கிப்போது குடை

என்று வீசியடித்துவிட்டு

ஆனந்தமாய் மழைக்குள்

ஆதிவரை நனைந்தது

அதைவிட சுகம்

 

`உடம்பு என்னத்துக்காவும்’

என்று செல்லமாய் அதட்டி

முந்தானையால் நீ

குடை பிடித்தது

சுகமோ சுகம்*