29#

*நம் கண்கள் சந்தித்துக்கொண்டபோதல்ல

மனங்கள் ஒன்றுபட்டபோதல்ல

உடல்கள் சங்கமித்தபோதல்ல

அதன்பிறகு நினைவற்ற தூக்கத்திலும்

பிடிவாதமாக என் கைகளை

சிறைப்படுத்திக்கொண்டிருந்த

உன் உள்ளங்கைச் சூட்டில்

அதிகம் உணர்ந்தேன்

உன் காதலை*