24#

*ஒரு குழந்தைபோல அழும்

உன்னை சமாதானப்படுத்தும்போது

முன்னிலும் அதிகமாய்

உன்மேல் காதல் வசப்படுகிறேன் நான்

 

என்ன நடந்து என்ன?

உன் முதுகு குலுங்குவது

எப்போது சற்றே குறைகிறதோ

அப்போதே

அடுத்து உன்னைச் சீண்ட

என்ன செய்யலாம் என்று

யோசிக்க ஆரம்பித்துவிடுகிறது மனம்!*