23#

*உன்னை

அழவைத்துப் பார்ப்பதில்

எனக்கு என்னதான் இன்பமோ

தெரியவில்லை.

வளையல் உடைத்து,

தாவணி கலைத்து,

முகத்துக்கு முன்னால் புகை ஊதி…

நீ கண் கலங்கும்போதெல்லாம்

முகம் சிவந்து அழும்போதெல்லாம்

முன்னர் இருந்த நான்

வேறுபோல

- உன்னை அணைத்துக்கொண்டு

மடியில் சாய்த்துக்கொள்ள வேண்டும்போல

ஆகிவிடுகிறேன்.

நீயும் முன்னிருந்தவன்

இவனில்லை என்பதுபோல்

உடனே அணைப்புக்குள்ளாகி

மடியில் சுருண்டு கொள்கிறாய்*