22#

*கனவா.. விழிப்பா.. என்று தெரியாத

அந்தத் தூக்க நிலையிலும்

உன் வாசத்தை

உணர்ந்துகொண்டது ஆச்சரியம்தான்.

வாசம் மட்டுமல்ல

உன் வளையல் சிணுங்கியதுகூட

கேட்டது போலிருந்தது

நீ அக்கம் பக்கம் பார்த்து

மெல்லக் குனிந்து…

உன் மார்புகூட

என் மார்பில் அழுந்தியதாக ஒரு நினைவு.

சட்டென்று விழித்துவிட்டேன்.

சுற்றிலும் ஒருவருமில்லை

நடந்தது கனவில் போல இருந்தாலும்

கன்னத்தில் இன்னும் காயாதிருந்தது

உன் முத்த ஈரம்.*