20#

*ஒவ்வொருமுறை

நாம் சந்திக்கும்போதும்

ஒவ்வொருமுறை

நாம் அணைக்கும்போதும்

ஒவ்வொருமுறை

நாம் ஏதாவது செய்துகொள்ளும்போதும்

விலகி நின்று

என்ன நடக்கிறதென்று

புரிந்துகொள்ள ஆசை.

ஒவ்வொரு முறையும்

நாம் ஆரம்பிப்பது தெரிகிறது

அதன்பிறகு

உதடுகள் பிரியும்போதுதான்

நினைவு திரும்புகிறது

ம்… இருக்கட்டும்

இடையில் நடப்பது

என்னவாக இருந்தால் என்ன?

நமக்குக் கவிதை வேண்டாம்…

காதல்தான் வேண்டும்.*