2#

*நாம் விரும்பாவிட்டாலும்

சூரியன் மறையத்தான் போகிறது

 

உன் சம்மதம் இல்லாவிட்டாலும்

நான் தொடரத்தான் போகிறேன்

 

சிறு வயதிலேயே

பயணிக்கும் மனிதருக்காய் இல்லாமல்

கடந்துசெல்லும் ரயிலுக்காய்

கைகாட்டி மகிழ்ந்தவன் நான்

 

மேலும்

காதலைக் காதலிப்பவருக்கு

காதலியின் சம்மதம்

ஒரு பொருட்டல்ல*