19#

*ஆடை மறைக்கும் பிரதேசங்களை

தொட்டாலே ஒரு கொடிபோல

துவண்டு கொள்கிறாய்.

கவிழ்ந்துகொள்ளும்

முகத்தை நிமிர்த்தவே பாதி சமயம்

தேவப்படுகிறது.

 

தீண்டப்படுதலும், தீண்டும் காதலன்

முகம் நோக்கலுமே அவ்வளவு

இன்பம் தருமா உங்களுக்கு-

ஒருமுறையாவது கலவியில்

பெண்ணாய் பங்குகொள்ள ஆசை

பொறுப்புகளை எதிராளி வசம் விட்டுவிட்டு

கண்மூடி (உன்னைப்போல) சும்மா இருந்து

என்ன நடக்கிறதென்று பார்க்க ஆசை*