18#

*முதலில் எனக்குப் புரியவில்லை

நீ `வேண்டாம் வேண்டாம்’ என்று

தடுத்தபோதும் அது உனக்குப்

பிடித்திருக்கிறது என்றுதான் நினைத்தேன்

 

நீ அழ ஆரம்பித்தபோதுதான்

சற்று அசங்கிப் போய்விட்டேன்.

கொஞ்சம் தள்ளி நின்று தயங்கித் தயங்கி

நான் மன்னிப்பு கேட்டபோது

உதட்டைத் துடைத்துக் கொண்டே

`அதுக்கில்ல’ என்று அழுகையினூடே

நெஞ்சில் சாய்ந்துகொண்டு

`இதுக்குத்தான்’ என்று

உடைந்த வளைலைக் காட்டுகிறாய்

- என்னதான் நான் வாங்கித் தந்ததாக இருந்தாலும்

வளையல் என்ன முத்தத்தைவிடப் பெரிதா?*