17#

*நெருங்கி வந்தால்

விலகி ஓடுகிறாய்

முத்தம் கேட்டால்

முகத்தைத் திருப்பிக் கொள்கிறாய்

அணைக்க முற்பட்டால்

பிடித்துத் தள்ளுகிறாய்

முரட்டுத்தனமாக சாதித்துக் கொண்டாலோ

சிரித்துக் கொண்டே

கண்மூடி நெஞ்சில் சாய்கிறாய்

ம்…

காதலின் வழிமுறைகள்

ஒன்றும் புரியவில்லை.*