16#

 

*பெண்களுக்கென்று

பிரத்யேகமாக

வாசனைகள் உண்டென்று

கேள்விப்பட்டிருக்கிறேன்

குறுகலான மாடிப்படிகளின்

எதிரெதிர்த் திசையில்

ஒருவருக்கொருவர்

வழிவிடுவதுபோல் வழிமறித்து

உரசிக்கொண்டே கடந்தோமே

அன்றுதான் தெரிந்துகொண்டேன்

வாசனைக்கென்றே

பிரத்யேகமான பெண்களும்

இருக்கிறார்கள் என்று*