10#

*நாம் பரிமாறிக்கொள்ளும் பார்வைகளையும்

நீ என் மீது எடுத்துக்கொள்ளும்

உரிமைகளையும் பார்க்கும்போது

இதைக் காதல் அல்ல எனக்

கண்மூடிக்கொள்ளவும் முடியவில்லை.

ம்… இல்லை. இது காதலில்லை.

உன்னைச் சதையாலான உருவமாக

என்னால் உருக்கொள்ள முடியவில்லை.

உன்னை உதடுகள் அழுந்த முத்தமிட்டால்கூட

எனக்குக் காமம் தோன்றாது

கவிதைதான் தோன்றும்!

சரி…

நம்மிடையே இருக்கிறதே ஏதோ ஒன்று -

குழந்தைபோல் அழகாகச் சிரித்துக்கொண்டு

அதற்கு என்னதான் பெயர்?

அட, விட்டுத்தள்ளு

ரோஜாவுக்குப் பெயரா முக்கியம்?*