ஓர் ஊரில் ஒரு கவிஞன் இருந்தான்
அவன் கவிதை எழுதக்
கற்றுக் கொண்ட போது
ஒருபுறாவைப் பார்த்தான்
அது தூரத்தில் உயரத்தில் இருந்தது.
அதன் வெண்மை இவனைக் கவர்ந்தது.
அதைப் பற்றி கவிதை எழுதினான்
மறு நாள் அதன் பேச்சு இவனைக் கவர்ந்தது
அதைப் பற்றி கவிதை எழுதினான்
தினமும் அதைப் பார்த்தான்
ஒவ்வொரு நாளும் அது
ஒவ்வொரு விதமாய் இவனைக் கவர்ந்தது.
ஒரு சுபயோகத்திருநாளில்
இவனுடைய கவிதைப் புத்தகம் நிரம்பியபோது
அவன் அதற்கு அருகில் வந்திருந்தான்.
எழுத இடமில்லாமல் பேனாவை கீழே வைத்து நிமிர்ந்தவன்
புறா அருகில் இருந்தோல்
அதை மெல்ல-மிக மெல்ல தொட்டுப் பார்த்தான்
ஒரு ஊரில்
ஒரு வெள்ளை மனுக்ஷ¨யும்
ஒரு அம்மண மனுக்ஷனும் இருந்தார்கள்
அவர்கள் முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட
புறாக்கவிதை சொல்லிக் கொண்டு குளிர் காய்ந்தார்கள்.