வெற்றிடம்

 

வெறுமையின் வியாபகம்
சூன்யமே முழுமையாய்.
மறக்க முயற்சித்தலே
நினைவுபடுத்தும் செயலாய்.
திசைகளற்ற ஆழத்தில் தொலைந்து போய்
நீல இருட்டின்
மையப்புள்ளியாய் நான்
இது பாடுபொருளின் குற்றமா
பாடுபவனின் குற்றமா
அதற்கே வெளிச்சம்