ரோஜா செடியின் கதை

 

தூர தேசத்தில்

ரோஜா செடி ஒன்று

முளைத்திருந்தது

அதில் நிறைய முட்களும்

ஒரு பூவும் இருந்தது

அந்த ரோஜா செடியின் உலகத்தில்

இரண்டு முக்கிய நபர்கள் இருந்தார்கள்.

அந்த இருவரில் ஒன்று ஆண்.மற்றது பெண்

 

ஆண் சிறிதும் அக்கறையற்றவன்

பல சமயங்களில் அவன் அந்தச் செடியை

உண்மையென்றே நம்பவில்லை

எப்போதாவது அவ்வழிப் போகும்போது

அருகில் வந்து பூவைப் பார்ப்பான்.

ரோஜா செடியில் அந்தப் பூவின் வாசம்

மட்டுமே அவனைக் கவர்ந்திருந்தது

சில சமயம் அதை மணப்பதற்காகவே

அவன் அங்கு வருவதும் உண்டு.

 

அந்த பெண்

மிகவும் பொறுப்பானவள்

அந்தச் செடி வுதான்றியதிலிருந்தே

அவள்தான் அதன் அருகில் இருந்தாள்

மலரை போற்றிப் பாதுகாத்து

அதை வாசம் வீச வைத்தவள் அவள்தான்

ஒரு போதும் அவள் அந்த ரோஜா செடியை

விட்டுப் பிரிந்ததில்லை.

 

அந்த ரோஜா செடி

எந்த அளவுக்கு

அந்தப் பெண்ணுக்கு கடமைப்பட்டிருந்தவுதா

அதே அளவுக்கு

அந்த ஆணுக்கும் கடமைப்பட்டிருந்தது

ஏனெனில் அவனிடம் ஏற்பட்ட

சில தேவைகள்தான்

அவளிடம்  மாறுதல்களை ஏற்படுத்தி

எதுவுமாக இல்லாமல்

எங்கோ ஓரிடத்தில்

காற்றில் மிதந்து கொண்டிருந்த

ஏவுதா  ஒன்றை

ஒரு ரோஜா செடியாக முளைப்பித்திருந்தது.

 

அந்த ரோஜா செடியின் காரியமே

அதிலுள்ள வாசனை ரோஜாதான்

என இருவருமே அறிந்திருந்தனர்.

ஆயினும் அவர்கள்

அந்தப் பூவைப்பறிக்க முயலவில்லை

 

அந்த ரோஜாவைப் பறித்து விட்டால்

அது இறந்து விடும்

அத்துடன்இந்த ரோஜா செடியும்

வெறும் முள் செடியாகிவிடும்

என அவள் பயந்தாள்.

அதனால் அவள் அந்தப் பூவைப் பறிக்கவில்லை

அந்த பூவைப் பறித்தாலும்

அது உயிருடன்தான் இருக்கும்

என அவன் நம்பினான்

ஆனாலும் அதன்வாசனை போய் விடுமோ

என அவன் பயந்தான்

அதனால் அவனும் அந்த மலரைப் பறிக்கவில்லை

 

இறுதி வரை பறிக்கப்படாமலே இருந்தால்

எங்கே அந்த மலர் வாடி உதிர்ந்து விடுமோ என்று

அந்த ரோஜா செடி பயந்தது.

தான் பிறந்த பயனை எதிர்பார்த்து அது காத்துக் கொண்டிருந்தது