நெருடல்

மிகவும் அலுக்கிறது

முன்னரே தீர்மானிக்கப்பட்ட பொய்கள் போல

கண் தெரிந்து கொண்டே ஆடும் கண் கட்டு ஆட்டம்போல

எல்லாம் அலுக்கிறது எனக்கு

உரக்க கத்தியதால் நான் மௌனமாகிவிட்டேன்

கனவு கண்டு என் கண்களும் சோர்ந்து விட்டன.

அரிதாரப் பூச்சில் என் முகமே மறந்து விட்டது.

நான் ஆட்டத்தை நிறுத்தப் போகிறேன்

எல்லாவற்றையும் கலைத்து விட்டு

..நான் சற்றே மரணமடைய விரும்புகிறேன்…