தூரத்தில் பார்வை

கிளியுடன் ஜோசியக்காரன்
விலாசம் கேட்டு ஒருவன்
அந்த வழித்தடத்தின் பேருந்து
கொஞ்சம் காற்று
காத்திருந்ததில் ஒரு கவிதை.
எல்லாம் வந்து விட்டது.
அவள் மட்டும் காணவில்லை.