சிறகுதிர்காலம்

எதில்தான் நம்பிககை கொள்வது

பிடித்துக் கொள்ள எதுவுமில்லை

பறப்பது என நாம் நினைக்க

காலுன்ற இடமில்லை என்பதே நிதர்சனம்

நாளை நாளை என்று எத்தனை கண்ணாமூச்சி

விரித்த வலை விருதா

நாமே சிக்கிக் கொள்வதே ஒரே பயன்

கடவுள் சொர்க்கம் எல்லாம்

சற்றே உபயோகப்பட்டாலும்

உண்மையில் யார் முதுகில் யார் என்று

கேள்வி îதான்றின் மறுபடியும் பிடி நழுவும்

நிரந்தரமாக இறக்கைகள் கொள்ள வழியே கிடையாதா..