சங்கு

 

தபால்காரன் கொண்டு வந்த

சேவலின் கூவல் கேட்டு

அனைவரும் மகிழ்ந்தனர்.

ஒழிந்தது இருட்டு என்று

கிழக்கு நோக்கி கூத்தாடினர்.

தனக்குத் திடீரென நேர்ந்த புறக்கணிப்பில்

எல்லோருக்கும் பின்னே

மகிழ்ச்சியோடு செத்துக் கொண்டிருந்தது

அந்த சாஸ்வத நிலா..