காலம்

இன்னும் முற்றிலுமாக

முடிந்து விடவில்லை போலும்.

வானத்தின் கீழுள்ள எல்லாவற்றிலும்

ஏதாவது ஒரு சாயலில்

இருக்கிறது என் காதல்

கடந்து போகும் பேருந்தின்

கடைசி இருக்கை மாதிலிருந்து

சில சமயங்களில் சும்மா வீசிப்போகும் காற்று கூட

ஊதி விடும் சாம்பல் நெருப்பை.

ஆயத்தங்களிலும் நம்பிக்கைகளிலுமாக

கழிகிறது வாழ்க்கை

காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

விரும்பியது நடக்கவில்லை எனினும்

மறப்பதற்காவது உதவி செய்யும் காலம்