கண்மூடிப் பூனைகள்

 

உறவும் மனிதரும்
காதலும் காமமும்
சுகமும் சந்தோஷமும்
எதுவும்
ஏன் இறுதி வரை தொடர்வதில்லை
கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடிக்க
பண்டிதம் விடுவதில்லை
கண்ணைத் திறந்து கடலைப் பார்த்தாலோ
எதுவுமே புரியவில்லை.
புத்தரும் போதிச்த்வரும் என்ன கிழித்தனர்,
ஏன் என்று விட்டதர்ல்
பிரச்சனைகள் தீர்ந்து விடுமா
எத்தனை போதனைகள்
எத்தனை உபதேசங்கள்.
எல்லாம் கண்மூடிÐக்கொண்ட -னைகள்.
கரை ஏறுவதால் நீச்சல் தெரிந்தோய்
கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
இத்தனை சங்கங்களும்
இத்தனை சாமிகளும் என்னத்துக்கு உபயோகம்
என்னதான் செய்வது
கவிதை எழுதி ஆறுதல் கொள்வதைத் தவிர
நம் போன்ற அந்தரத்த்து மனிதருக்கு
இப்போதைக்கு எதுவுமில்லை.