என்னுரை

 

மழையையும் காதலையும் பிசைந்து செய்தவை இந்தக் கவிதைகள்.

மழைக்காலமென்றால் காதல் வரும்.

காதல் வந்தால் கவிதை வரும்.

கவிதை வந்தால் மழை வரும்.

 

ஐந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியும் கிடைக்காத

மனநிறைவு இந்த ஒரு தொகுப்பில் எனக்குக் கிடைத்திருக்கிறது.

அதற்காக இன்னொரு முறை சம்பந்தப்பட்ட அனைவருக்கும்

என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

 

முக்கியமாக எனக்கு எழுத முழு உற்சாகம் தந்த என் நண்பர்களுக்கும்.

புத்தகம் தன் உரு அடையும்வரை, கூட இருந்து உதவி செய்த

அண்ணன் திரு அறிவுமதிக்கும்

 

நன்றிகளுடன்,

எஸ்.டி. விஜய்மில்டன்