இப்போதெல்லாம்

முன்பெல்லாம்
காயப்படும்போது வலி மறக்க
உன்னை நினைவூட்டிக் கொள்வது வழக்கம்
நேற்று ஒரு பேனாகிடைத்தது.
உன் பெயரை உள்ளங்கையில்
கிறுக்கிப் பார்த்தேன்…
முள் கீறியதில் கை வலித்தது.