இதே நேரம்

கடந்து செல்லும் ரயிலின்

ஏîதா ஒரு பெட்டியில் நீ இருக்கலாம்

எனக்கு மேலே பறக்கும் தும்பி

உன்னையும் கடந்திருக்கலாம்

நான் பார்த்துக் கொண்டிருக்கும்

பாடலை நீ கேட்டுக்கொண்டேனும் இருக்கலாம்

என் தலை கலைக்கும் காற்றில்

உன் மூச்சு கலந்திருக்கலாம்.

அல்லது நான் சுவாசிக்கும் காற்று

உன் தலை கலைத்து வந்தோகக்கூட இருக்கலாம்

ஒரு வேளை இதே நொடியில்

நீ என்னை நினைக்கக்கூட செய்திருக்கலாம்

இன்றோ,என்றோ ஒரு நாள் நாம்

தற்செயலாகவேனும் எதிர்ப்பட நேரலாம்..

அப்போது உன்னிடம்

கேட்பதற்காக இரண்டு எழுத்துக்கள்

சேர்த்து வைத்திருக்கிறேன்

“ஏன்”