அதைப்பற்றி

 

 

எலலோருக்கும்போல
எனக்கும் ஓரு நாள் அது எதிர்பட்டது.
என்றாலும் மற்றவரிடமிருந்து
இயல்பில் எனது வழக்கம்போல வித்தியாசமானது
அது தோன்றியதை  நான் காணவில்லை
நான் கண்டபோது அது வேற உரு அடைந்திருந்தது.
பல்கி வளர்ந்து முடிவடையும் நிலையில்
முடிவடையும் என்றா சொன்னேன்
இல்லை அது பல முறை அப்படி
வுதான்றியிருக்கிறது.
இவுதா முழுமை என்பது போல
ஆனால் ஒவ்வொரு முறையும்
இன்னொரு பலகணி
திறந்து கொண்டு
மீண்டும் பயணம் தொடங்குகிறது
நிறைய பலகணிகள்
மற்றபடி இப்போதைக்கு
மேற்கொண்டு எழுதுவதற்கொன்றுமில்லை.